×

சி.எஸ்.கே – ஆர்.சி.பி போட்டி: ஆன்லைனில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட்டால் ரசிகர்கள் அதிருப்தி

சென்னை: சி.எஸ்.கே. ஆர்.சி.பி. இடையே முதலாவது ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

இந்த முறை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை 2 கட்டங்களாக நடத்துவதற்கு நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர்.அதன் அடிப்படையில் போட்டி அட்டவணை முதற்கட்டமாக மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மொத்தம் 21 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 74 போட்டிகளைக் கொண்டதாக நடத்தப்படும்.

சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – பொங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்கியது.

குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 அதிகபட்சமாக ரூ.7,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன. டிக்கெட் முழுமையாக விற்கப்பட்டு விட்டதாக காட்டப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

The post சி.எஸ்.கே – ஆர்.சி.பி போட்டி: ஆன்லைனில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட்டால் ரசிகர்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : C. ,IPL ,Chennai ,C. S. K. R. C. B. ,C. S. K—R ,. C. B ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி