மாஸ்கோ: அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியான சூழலில், ரஷ்ய அதிபராக பதவி ஏற்க தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் தயாராகி விட்டார். ரஷ்ய அதிபராக தற்போதுள்ள விளாடிமிர் புடினின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அங்கு அதிபர் தேர்தல கடந்த 15ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் புடின்(71) மீண்டும் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் நிகோலய் கரிடோனோவ், தேசிய லிபரல் ஜனநாயக கட்சியின் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் புதிய மக்கள் கட்சியின் விளாடிஸ்லாவ் டாவன்கோ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
3 நாட்கள் நடந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளிலும் அனைவரும் வாக்களித்தனர். இதேபோல் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ரஷ்யர்களும் அங்குள்ள தூதரகங்கள் வாயிலாக வாக்குப்பதிவு செய்தனர். யூரல்ஸ் நகரின் எகாடெரின்பர்க்கில் வாக்குப்பெட்டியின் மீது பச்சை நிற திரவத்தை வீசிய பல்கலைக் கழக பேராசிரியர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ரஷ்ய அரசியலில் தனது எதிரிகளை ஒடுக்க நினைக்கும் புடினின் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் நீண்டநாள் போர், புதினின் பரம எதிரி அலெக்கி நாவல்னி கடந்த மாதம் சிறையில் உயிரிழந்தது போன்ற காரணங்கள் புதினின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் இதனை முறியடிக்கும் விதமாக அதிபர் தேர்தலில் புடின் வெற்றி பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த தேர்தல் மீண்டும் ரஷ்ய அதிபராகிறார் புடின் appeared first on Dinakaran.