×

மேலும் ஒரு பணமோசடி வழக்கு கெஜ்ரிவால் இன்று ஆஜராக சம்மன்: 9வது முறையாக அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லி குடிநீர் வாரிய (டிஜேபி) நிதி முறைகேடுகள் தொடர்பான இரண்டாவது சட்டவிரோத பணமோசடி வழக்கில், இன்று விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு அமலாக்க இயக்குநரகம் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கெஜ்ரிவாலை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக் கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராக வில்லை. இந்த நிலையில், அவருக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பாக டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. எனினும். இந்த வழக்கில் வரும் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு 9வது சம்மனை அனுப்பி அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, டெல்லி குடிநீர் வாரியம் நிதி முறைகேடு தொடர்பான மற்றொரு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. குறிப்பாக, டெல்லி குடிநீர் வாரிய பணிகளுக்காக தகுதியில்லாத ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும், இதற்கு கைமாறாக லஞ்சம் பெற்று அந்த பணம் ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கு செலவிட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது கெஜ்ரிவாலுக்கு எதிராக இரண்டாவது பணமோசடி வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கடந்த மாதம் முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்பி என் டி குப்தா, டெல்லி குடிநீர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார், ஆடிட்டர் பங்கஜ் மங்கல் உள்ளிட்டவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அதன்பின் அரோரா மற்றும் அனில் குமார் அகர்வால் என்ற ஒப்பந்ததாரரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

The post மேலும் ஒரு பணமோசடி வழக்கு கெஜ்ரிவால் இன்று ஆஜராக சம்மன்: 9வது முறையாக அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,The Enforcement Directorate ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Delhi Water Board ,DJP ,Kejriwal ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம்...