×

தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்: முன்னாள் அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு

வாஷிங்டன்: சமூகத்தினருக்கு பாதுகாப்பை அளிப்பது நான் தான் என்றும் நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் ரத்தகளறி ஏற்படும் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆகியோரிடையே மீண்டும் போட்டி நடக்க உள்ளது. அமெரிக்காவின் ஓஹியோவில் சென்ட் சபைக்கான குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

இதையொட்டி தொழிலதிபர் பெர்னி மொரேனோ என்பவரை ஆதரித்து டிரம்ப் நேற்றுமுன்தினம் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,‘‘ பெர்னி மொரேனோ ஓஹியோ சமூகங்களை கட்டியெழுப்ப தனது வாழ்க்கை முழுவதையும் அவர் செலவிட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் வாஷிங்டனில் போர் வீரராக இருக்க போகிறார். சமூகமக்களின் பாதுகாப்பை வழங்குவது நான் தான் என்றும் ஜோ பைடன் அல்ல. எனவே, நான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் நாட்டில் ரத்தகளரி ஏற்படும்.

வெளிநாடுகளில் தயாரித்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்’’ என்றார். டிரம்ப்பின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து ஜோ பைடனின் பிரசார செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் சிங்கர் கூறுகையில்,‘‘அச்சுறுத்தல்கள் மூலம் அரசியல் வன்முறையை இரட்டிப்பாக்குகிறார் டிரம்ப். ஆனால், டிரம்பின் தீவிரவாத போக்கை நிராகரித்துள்ள மக்கள் அவருக்கு மேலும் ஒரு தோல்வியை கொடுக்க போகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

The post தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்: முன்னாள் அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Former ,President Trump ,WASHINGTON ,presidential election ,Joe ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...