×

சீர்மரபினருக்கு ஒற்றை சான்றிதழ் மூலம் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

சென்னை: தமிழ்நாடு அரசு சீர்மரபினர் நலவாரியம் துணை தலைவர் இராசா அருண்மொழி வெளியிட்ட அறிக்கை: சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதால் குழப்பமான சூழ்நிலை இருந்தது. இதனை அகற்றுவதற்கான முயற்சியை எடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த இரட்டை சான்றிதழ் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

கலைஞர் தலைமையிலான அரசால் 2008 முதல் சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் 2019ல் அன்றைய அரசால் மாறுபாடான அறிவிப்பு செய்யப்பட்டது. மாநில அரசின் உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (டிஎன்சி) எனவும், ஒன்றிய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (டிஎன்டி) எனவும் அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டது. இது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்களுக்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். லட்சக்கணக்கான மக்களின் கோரிக்கையை ஏற்று ஒற்றைக் கையெழுத்தில் உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் பொற்கால ஆட்சி தொய்வில்லாமல் தொடரட்டும் என வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சே.கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில், எங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதே போல பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

The post சீர்மரபினருக்கு ஒற்றை சான்றிதழ் மூலம் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu Government ,Seermarapinar Welfare Board ,Vice Chairman ,Raza Arunmozhi ,Seermarapinar ,Seermarabin ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...