×

பணம் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது; நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

புதுடெல்லி: பணம் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியில் தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான நிதின் கட்கரி, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நான் ஒன்றும் அரசியலை தொழிலாக செய்யவில்லை. கட்டியின் அடிமட்டத் தொழிலாளி; ஆர்எஸ்எஸ் சுயம்சேவகராகவும் இருக்க விரும்புகிறேன். கடந்த 2014ம் ஆண்டுக்கு முன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடங்கியது. அதனால் குஜராத் முதல்வராக சிறப்பாக பணியாற்றிய மோடியை, 2014ல் பிரதமர் வேட்பாளராக களமிறக்கினோம். 2019ல் மீண்டும் வெற்றி பெற்றோம். கடந்த 65 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யத் தவறியதை, கடந்த பத்தாண்டுகளில் பாஜக அரசு சாதித்தது. மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மீண்டும் ஒருமுறை சாதனை நிகழ்த்துவோம்.

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது நினைக்கிறேன். சாதி, மதம் போன்ற பிரிவினைவாத அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிரதமர் மோடியுடனான எனது உறவு மிகவும் அன்பானது. நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டது. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தால், எனக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா? என்கின்றனர். என்னை பொறுத்தவரை நான் கட்சியின் தொண்டன். தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றிய அரசு பின்பற்றும்.

பணம் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால், செலவு வரம்பு பிரச்னைக்கு தீர்வு காண, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை அமைப்பதில் ஏழு உலக சாதனைகளை படைத்துள்ளோம். ரூ.50 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை ஊழலின்றி செய்து முடித்துள்ளேன்’ என்றார்.

The post பணம் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது; நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nitin Khatkari ,New Delhi ,BJP ,Nitin Katkari ,Prime ,Nitin Kadkari ,Dinakaran ,
× RELATED “இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக...