- அமலாக்கத் துறை
- தில்லி
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- அமலாக்கத் துறை
- கெஜ்ரி
- டெல்லி அரசு
- தில்லி முதலமைச்சர்
- தின மலர்
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 9வது முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கெஜ்ரிவால் வரும் 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குபதிந்தது. கடந்த ஓர் ஆண்டாக ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் சிலர் சிறையில் உள்ளனர்.
இவ்வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. இதுவரை 8 சம்மன்கள் அனுப்பப்பட்டும், அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்நது சம்மன்களை தொடர்ந்து நிராகரித்தது தொடர்பாக அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியதோடு ரூ.15,000 பிணைத்தொகையையும் செலுத்தும்படி உத்தரவிட்டார்.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு வந்த அடுத்த நாளே அமலாக்கத்துறை 9வது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பியுள்ளது. மேலும் இந்த சம்மனுக்கு விளக்கம் அளிக்க மார்ச் 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.