×

புகழ்பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணியசாமி கோயிலுக்கு மலைப்பாதை: பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தல்

வேலாயுதம்பாளையம்: கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு மலைப்பாதை கேட்டு பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற புகழிமலை முருகன் கோயில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ளது. வேலாயுதம்பாளையத்திற்கும் புகழிமலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கரூரில் வாழ்ந்த சமண முனிவர்களுக்கு மலையை குடைந்து படுக்கை அமைத்து கொடுத்த வரலாறு கரூரில் வாழ்ந்த சமண முனிவர்களின் பாதுகாப்புக்காக மலையை குடைந்து படுக்கை அமைத்து கொடுத்துள்ளனர். ஆறுநாட்டார்மலை என அழைக்கப்படுகிற அதில் சேரர்களை பற்றிய தகவல்கள் புலப்படுகின்றன.

முன்பிருந்த கொங்கு 24 நாடுகளில் மணநாடு, தலையநாடு, தட்டையநாடு, கிழங்கு நாடு, வெங்கலநாடு, வாழவந்தி நாடு ஆகிய ஆறுநாட்டவர்களும் குலதெய்வமாக இந்த மலை மீதுள்ள முருகபெருமான் விளங்கியதால் ஆறுநாட்டார் மலை (புகழிமலை) என பெயர்க்காரணம் வந்ததாக கூறப்படுகிறது. இக்கோயிலில் தரை மட்டத்திலிருந்து மேலே சென்று வர 327படிகளை பக்தர்கள் கடந்து செல்ல வேண்டும்.தற்போது அங்குள்ள சமணர் படுக்கைகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகிய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதற்கு ஆதாரமாக கரூர் அமராவதி ஆற்றங்கரையில் ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட கரூர் நகரானது கைத்தறி நகரம் என தொழில் ரீதியாகவும், மாமன்னர் ராஜராஜசோழனுக்கு ஆலோசகராக விளங்கிய சித்தர் கருவூரார் உள்ளிட்டோர் வாழ்ந்த இடம் மற்றும் பிரம்மன் தனதுl படைப்பு தொழிலை தொடங்கிய இடம் கல்வெட்டுகளிலும் உறுதிப்படுத்துகிறது. இத்தனை சிறப்புமிக்க பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு மலைபாதை அமைத்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் .

தற்போது வயதான மற்றும் 50 வயது கடந்தவர்களுக்கு படிமேல் நடந்து செல்ல சிரமப்படக்கூடிய நிலை இருப்பதால் அனைத்து பக்தர்களின் திருப்தி படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post புகழ்பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணியசாமி கோயிலுக்கு மலைப்பாதை: பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Hill ,Pugazhimalai Balasubramaniasamy Temple ,Velayuthampalayam ,Pugazhimalai Balasubramaniaswamy temple ,Karur Velayuthampalayam ,Pugazhimalai Murugan Temple ,Karur District ,Karur ,Pugazhimalai ,Balasubramaniasamy temple ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை