×

கோவை மாவட்டம் பேரூர் அருகே உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

கோவை: கோவை மாவட்டம் பேரூர் அடுத்த வேடப்பட்டியில் உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம் வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் ஒற்றை யானை விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது.

குறிப்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்பாக கரடிமடை பகுதியில் 4 பேர் காட்டி யானையால் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வெளியே வராத காட்டு யானை இன்று அதிகாலை வனப்பகுதியிலிருந்து வெளியேறி பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஊருக்குள் நுழைந்துள்ளது.

மலை பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் கடந்து வந்த காட்டு யானை பேரூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் பின்புறத்தில் சுற்றி வருகிறது. யானையை விரட்டும் பணியில் கோவை வனச்சரக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்லக்கூடிய பகுதி என்பதால் எவ்வித அசம்பாவித சூழல் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக காட்டு யானை தொடந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. உலா வரும் காட்டு யானையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post கோவை மாவட்டம் பேரூர் அருகே உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Perur ,Goa district ,KOWAI ,WADAPATI ,KOWAI DISTRICT ,GOWAI DISTRICT ,VEDPATTI ,DONDAMUTUR ,
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...