×

கொரடாச்சேரி அருகே தாய் திட்டியதால் மகள் தற்கொலை

 

நீடாமங்கலம், மார்ச்17: கொரடாச்சேரி அருகே தாய் திட்டியதால் மனம் உடைந்த மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கொரடாச்சேரியை அடுத்த அத்திச்சோழமங்கலத்தை சேர்ந்த வீரையன் மகள் தீபிகா (22). பிளஸ் 2 வரை படித்துள்ள இவரை பாட்டியிடம் அடிக்கடி சண்டை போடாதே என இவரது அம்மா திட்டி உள்ளார். எனக்கு ஆதரவாக பேசாமல் உனது அம்மாவிற்கு சப்போர்ட் செய்கிறாயா என கூறிவிட்டு வயலுக்கு தெளிக்க வைத்திருந்த விஷ பூச்சி மருந்து எடுத்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தீபிகா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனன்றி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post கொரடாச்சேரி அருகே தாய் திட்டியதால் மகள் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Koradacherry ,Needamangalam ,Veerayan ,Deepika ,Atchicholamangalam ,Koradacheri ,
× RELATED காய்கறி சாகுபடி உற்பத்தியை அதிகரிக்க...