×

மூதாட்டி கொலை வழக்கில் பெண் கைது: நகை, பணத்தை திருடி சென்றது அம்பலம்

 

அரியலூர், மார்ச் 17: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மூதாட்டி கொலை வழக்கில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். செந்துறை அடுத்த இலங்கைச்சேரி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பவளக்கொடி(65). கடந்த 14.3.2024 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து செந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டதில், இதே பகுதியைச் சேர்ந்த பவளக்கொடி உறவினரான செந்தில்குமார் மனைவி சரஸ்வதி என்பவர் பவளக்கொடியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 14.3.2024 அன்று சரஸ்வதி வீட்டுக்குச் சென்ற பவளக்கொடியிடம், மருத்துவச் செலவுக்காக அடமானம் வைக்க காதில் அணிந்திருந்த தோடு மற்றும் மாட்டலை தருமாறு கேட்டு உள்ளார். அதற்கு அவர் தர மறுத்தாகவும், அதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி, பவளக்கொடியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தோடு, மாட்டல் ஆகியவற்றை பறித்துவிட்டு, வீட்டில் இருந்த ரூ.13,000ஐ திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் சரஸ்வதியை நேற்று கைது செய்தனர்.

The post மூதாட்டி கொலை வழக்கில் பெண் கைது: நகை, பணத்தை திருடி சென்றது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Ambalam ,Ariyalur ,Sentura ,Ariyalur district ,Pavalakodi ,South Street, Sri Lankacherry ,
× RELATED புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில்...