×

வாலிபரை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது

 

பொள்ளாச்சி, மார்ச் 17: பொள்ளாச்சியில் உள்ள ஒரு பழக்கடையில், தூத்துக்குடி மாவட்டம் செட்டிக்குளத்தை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர் வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில், தான் தங்கியிருக்கும் அறையில் இருந்து கடைக்கு சென்று கொண்டிருந்தார். தன்னாசியப்பன் கோவில் வீதி அருகே வரும்போது, அங்கு போதையில் நின்று கொண்டிருந்த 3 பேர் சேர்ந்து விக்னேசிடம், உன்னை பார்த்தால் குழந்தை கடத்தல்காரன் போல் உள்ளது, என கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த சிலரும் விக்னேசிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விக்னேஷ், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விக்னேசை தாக்கியது தன்னாசியப்பன் கோவில் வீதியை சேர்ந்த தம்பான் என்ற ராஜேந்திரன் (35), குணசேகரன் (25), கருப்புசாமி (34) என தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

 

The post வாலிபரை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Vignesh ,Chettikulam, Tuticorin district ,Thannasiyappan ,
× RELATED ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விவசாயி தற்கொலை முயற்சி-பரபரப்பு