×

பூ மார்க்கெட் புனரமைப்பு கோவை மாநகராட்சி ஆணையருக்கு வணிகர் சங்க பேரமைப்பு நன்றி

 

கோவை, மார்ச் 17: கோவை பன்னீர்செல்வம் பூ மார்க்கெட்டினை புனரமைத்து வாகனங்கள் நிறுத்துமிடம் பார்க்கிங் ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், கோவை மாநகராட்சிக்கும் கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், கோவை மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் இருதயராஜா தலைமையில் கோவை மாநகராட்சி ஆணையாளரை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் முன்னதாக கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், துணை மேயர் வெற்றிச்செல்வன், கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ், மேற்கு மண்டல தலைவர் தமிழ்மறை மற்றும் மேற்கு மண்டல உதவி கமிஷனரை கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் மற்றும் செயலாளர் ஏ.முஸ்தபா, பொருளாளர் கே.கே.அய்யப்பன் துணைத்தலைவர் எம்பிஎம் மொய்தீன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாகவும் வணிகர் சங்கத்தின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்தனர்.

The post பூ மார்க்கெட் புனரமைப்பு கோவை மாநகராட்சி ஆணையருக்கு வணிகர் சங்க பேரமைப்பு நன்றி appeared first on Dinakaran.

Tags : Merchants Association Federation ,Coimbatore Corporation ,Coimbatore ,Coimbatore District Florists Association ,Government of Tamil Nadu ,Panneerselvam Flower Market ,
× RELATED கோவை மாநகராட்சி எல்லையை விரிவுப்படுத்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை..!!