×

பிரதமரின் வாய்ச்சவடால் தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க தவறிவிட்டது: முத்தரசன் விமர்சனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 15 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களது படகும் மீன்பிடி சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 14ம் தேதி இரவு கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அகஸ்தீஸ்வரத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காது கிழிய பேசிய மோடியின் வாய்ச் சவடால் மீனவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது. தனது ஆட்சியின் தோல்வியை மறைக்க இந்தியா கூட்டணி மீது பழி சுமத்துகிறது. ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் அரசியல் உறுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், சிறையில் உள்ள மீனவர்களை திருப்பி அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

The post பிரதமரின் வாய்ச்சவடால் தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க தவறிவிட்டது: முத்தரசன் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : PM ,Tamil Nadu ,Mutharasan ,CHENNAI ,Communist ,State Secretary ,Karaikal ,Sri Lankan Navy ,
× RELATED கோவை மாவட்டத்தில் வெப்ப அலை...