×

கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க தனுஷ்கோடி-அரிச்சல்முனை வரை பசுமை பேருந்து இயக்க நடவடிக்கை

மண்டபம்,மார்ச் 17: ராமேஸ்வரம் தீவிற்கு சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா படகு, பசுமை பேருந்து ஆகிய புதிய இரண்டு திட்டங்கள் துவங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ராமேஸ்வரம் தீவு பல்லுயிர் மற்றும் இயற்கை அழகுகள் நிறைந்தது. ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோயில் மற்றும் உலக புகழ்பெற்ற தனுஷ்கோடி பகுதியை பார்வையிடுவதற்கும் தினசரி உலக அளவில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாசிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் திருக்கோவிலூர் சாமி தரிசனம் முடிஞ்சு சுற்றுலா தலங்களை பார்வையிட அதிகமாக ஆர்வம் அடைந்துள்ளனர். அதன் பேரில் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தினசரி தனுஷ்கோடி, அரிச்செல்முனை கடலோர பகுதிக்கு இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து செல்கின்றன. சில வசதியானவர்கள் தனி வாகனம் மூலம் சென்று வருகின்றனர்.

இதனால் அந்த பகுதிகளில் புகைமண்டலம் ஏற்பட்டு பெரும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் கடலில் வாழக்கூடிய கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் தனித்துவம் வாய்ந்த ராமேஸ்வரம் தீவின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்தும் விதத்தில் வனத்துறை சார்பில் தனுஷ்கோடி பகுதியில் வாழும் கடல் ஆமைகள் மற்றும் புலம் பெயர்ந்த பறவைகளை காக்கும் நோக்கத்திலும் இரண்டு சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்திற்கு அருகிலும் மற்றொன்று பாம்பன் தென் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள குந்துகாலிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தில் சுற்றுலா வாசிகள் வசதிக்கேற்ப கண்டு கழிக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மரத்தாலான ஜெட்டிகள் மற்றும் கண்ணாடியாலான அலுமினிய படகுகள் ஆகியவை சுற்றுலா பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. மேலும் கடல் ஆமைகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பிற்காக மாசுபாட்டை குறைக்கும் விதத்தில் தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரையில் 7 பசுமை பேருந்துகளை இயக்கவும் வனத்துறை நிர்வாகம் முடிவு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ராமேஸ்வரம் தீவில் இயற்கை சூழல் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி தீவில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும், வாழ்வாதாரம் மேம்படவும் வழிவகை செய்யப்படும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க தனுஷ்கோடி-அரிச்சல்முனை வரை பசுமை பேருந்து இயக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi-Arichalmunya ,Mandapam ,Rameswaram island ,Ramanatha ,Rameswaram ,Dhanushkodi ,-Arichalmunya ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை