- அரசு கலைக் கல்லூரி
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம்
- 12 அரசு கலைக் கல்லூரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 12 முதல்வர்களுக்கு பதவி உயர்வு (தரம்-1) வழங்கி மற்றொரு கல்லூரிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்களாக (தரம்-2) பணியாற்றி வருபவர்களுக்கு பதவி உயர்வு(தரம்-1) வழங்கி உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டு இருக்கிறது. அந்தவகையில் 12 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருப்பதோடு, அவர்கள் ஏற்கனவே பணியாற்றி வந்த கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு பணி இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். அரசாணையில் இடம்பெற்றுள்ள பதவி உயர்வு பெற்றவர்களின் பெயரும், தற்போது முதல்வர்களாக (தரம்-1) பணியாற்ற உள்ள கல்லூரிகளின் விவரமும் வருமாறு:
எல்.ரேவதி- திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, டி.கணேசன்- திருச்சி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, கே.மாரியம்மாள்- கரூர் அரசு கலைக் கல்லூரி, எஸ்.கீதா- கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி, கே.சுடர்கொடி- சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி, எம்.சுமதி- சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, எஸ்.கலைமகள்- சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லூரி, எஸ்.ஸ்ரீதரன்- அரியலூர் அரசு கலைக் கல்லூரி, ஆர்.ராஜேந்திரன்- கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, ஏ.ரவிந்திரன்- திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி, எஸ்.கீதா- நிலக்கோட்டை(திண்டுக்கல்) அரசு மகளிர் கலைக் கல்லூரி, எம்.பிரேமலதா- தஞ்சாவூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post 12 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்கு பதவி உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.