×

ஐபிஎல் தொடக்க லீக் ஆட்டம்; டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்: ஆன்லைனில் வாங்கலாம்


சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். மார்ச் 18ம் தேதி காலை 9.30 மணி முதல் டிக்கெட்கள் PAYTM அல்லது www.insider.in என்ற இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படும் (ஒருவருக்கு 2 டிக்கெட்கள் மட்டுமே).

சிஎஸ்கே இணையதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு பரிசாக, ஆட்டத்தை பார்ப்பதற்கான டிக்கெட்கள் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் ஒன்றின் விலை ரூ1700 முதல் ரூ7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

The post ஐபிஎல் தொடக்க லீக் ஆட்டம்; டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்: ஆன்லைனில் வாங்கலாம் appeared first on Dinakaran.

Tags : IPL ,CHENNAI ,IPL T20 ,Chennai Super Kings ,Royal Challengers ,Bangalore ,Chennai, Chepakkam MA ,Chidambaram Arena ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?