×

சில்லிபாயின்ட்

* ஆப்கானிஸ்தானுடன் ஷார்ஜாவில் நடந்த முதல் டி20 போட்டியில், அயர்லாந்து அணி 38 ரன் வித்தியாசத்தில் வென்றது. அயர்லாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன். ஹாரி டெக்டர் ஆட்டமிழக்காமல் 56 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஆப்கான் பந்துவீச்சில் கேப்டன் ரஷித் கான் 4 ஓவரில் 19 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய ஆப்கான் 18.4 ஓவரில் 111 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. அயர்லாந்து தரப்பில் பென் ஒயிட் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது டி20 இன்று இரவு நடக்கிறது.

* வங்கதேச அணியுடனான 2வது 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. சட்டோகிராமில் நடந்த இப்போட்டியில், வங்கதேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது (தவ்ஹித் ஹ்ரிதய் 96*, சர்கார் 68, ஷான்டோ 40). இலங்கை பந்துவீச்சில் ஹசரங்கா 4 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய இலங்கை 47.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இலக்கை எட்டியது. பதும் நிசங்கா 114, சரித் அசலங்கா 91, ஹசரங்கா 25 ரன் விளாசினர். நிசங்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 நாளை நடக்கிறது.

* கிரிக்கெட் வாரியம், ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கான ஊதியத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.

* இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் வேகம் ஆகிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சில்லிபாயின்ட் appeared first on Dinakaran.

Tags : Sillypoint ,Ireland ,T20I ,Afghanistan ,Sharjah ,Harry Tector ,Silly Point ,Dinakaran ,
× RELATED சில்லிபாயின்ட்..