×
Saravana Stores

ஜம்முவில் 6 அமைப்புகளுக்கு தடை: ஒன்றிய அரசு நடவடிக்கை


புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்கம் அறிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி கடந்த 2019ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீர் மக்கள் கழகம்(முக்தர் அகமது வாசா), ஜம்மு காஷ்மீர் மக்கள் கழகம்(பஷீர் அகமது டோட்டா), ஜம்மு காஷ்மீர் மக்கள் கழகம்(குலாம் முகமது கான்), ஜம்மு காஷ்மீர் மக்கள் கழகம் (அஜீஸ் ஷேக்) மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் சுதந்திர லீக் ஆகிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

The post ஜம்முவில் 6 அமைப்புகளுக்கு தடை: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Govt ,New Delhi ,Union Home Ministry ,Jammu and Kashmir Liberation Front ,Mohammad Yasin Malik ,Jammu ,Union government ,Dinakaran ,
× RELATED அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்கிய ஒன்றிய அரசு