×

சமாஜ்வாடி கட்சியின் 5வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

லக்னோ: உத்தரபிரதேசத்தின் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 17 இடங்களை சமாஜ்வாடி ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாடி போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் 4 கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த சமாஜ்வாடி, நேற்று 5வது பட்டியலை வௌியிட்டது. அதன்படி, தர்மேந்திர யாதவ்(அசம்கர்) மகேந்திர குமார்(கவுதம் புத்த நகர்), மனோஜ் குமார் ராஜ்வன்ஷி(மிஸ்ரிக்), பீம் நிஷாத்(சுல்தான்பூர்), ஜிதேந்திர டோஹாரே(எட்டாவா) மற்றும் நாராயணன் தாஸ் அஹிர்வார்(ஜலான்) தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

மகாராஷ்டிரா இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
சிவ சேனா(யூபிடி) தலைவர் சஞ்சய் ராவத்: மக்களவை தேர்தலை வரவேற்கிறேன். மகா விகாஸ் அகாதி அதற்கு தயாராக இருக்கிறது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். மகாவிகாஸ் அகாதி வேட்பாளர்களின் பெயர்கள் மும்பையில் (இன்று) நடக்கும் பேரணிக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

The post சமாஜ்வாடி கட்சியின் 5வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Samajwadi Party ,Lucknow ,Uttar Pradesh ,Congress ,All India Alliance ,Dinakaran ,
× RELATED லாலு மருமகனுக்கு சீட் ஒதுக்கிய...