×

ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்: இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்

சென்னை: ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம் மேற்கொள்கிறார். அவர் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் நிறைவடைகிறது.

அன்று மாலை 7 மணியளவில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார். இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத் சந்திர பவார் தலைவர் சரத்பவார் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். மும்பை செல்லும் அவர், ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொள்வதுடன், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். தமிழ்நாட்டில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மும்பை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவே சென்னை திரும்பவும் திட்டமிட்டுள்ளார்.

The post ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்: இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார் appeared first on Dinakaran.

Tags : Rakulkanti Pilgrimage ,Chief Minister ,K. Stalin ,Mumbai ,India ,Coalition General Meeting ,Chennai ,Chief Minister MLA MLA ,India Alliance General Meeting ,Former ,Congress Party ,Rakulganti ,Bharat Unity Justice Pilgrimage ,Prime Minister MLA ,Dinakaran ,
× RELATED ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி...