×

ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம்” என தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையர் இன்று வெளியிட்டார். நடப்பாண்டிற்கான ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இந்நிலையில் தேர்தல் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளதாவது, ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம் எனவும் வெறுப்பு, கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக ‘இந்திய மக்களாகிய நாங்கள்’ ஒன்று சேர்ந்து போராடுவோம் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

The post ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Tags : MALLIKARJUNA KARKE ,Delhi ,President ,Mallikarjuna Garke ,India ,18th People's Election ,
× RELATED மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்;...