×

தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்!

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மக்கள் பிரதநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்யாத 27 பேர் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் கணக்குகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

அதன்படி, 2021 முதல் 2024 மார்ச் 15-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிவைத்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

The post தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்! appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Tamil Nadu ,Chennai ,Sivaganga Lok Sabha Constituency ,Senthil Kumar ,Sattaperawa ,
× RELATED மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி...