×

தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம்… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!!

துபாய் : மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டு அச்சடிப்பது, பாதுகாப்பாக கொண்டு செல்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

*தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணியை கண்காணிக்க தனியாக ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

*வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும்.

*தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

*தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.

*தபால் வாக்கு சீட்டு அச்சடிக்கும் பணி விவரங்களை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம்.

*ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களிட வேண்டும்.

*தபால் வாக்கு சீட்டுகளில் வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவை சரியாக அச்சடிக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

*அச்சடிக்கப்பட்ட தபால் தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும்.

*வாக்கு சீட்டுகள் அனைத்தும் ஒரு இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டு, தனி அறையில்
பாதுகாக்கப்பட வேண்டும்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம்… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!! appeared first on Dinakaran.

Tags : ELECTORAL COMMISSION ,Dubai ,Chief Electoral Commission ,Election Commission of India ,Chief Election Officers ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...