×

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கல்

 

பவானி, மார்ச். 16: கோடை காலம் தொடங்கியதை தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு நீர்மோர், எலுமிச்சை ஜூஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் கோயில்களில் கோடை காலத்தில் நீர் மோர், பழச்சாறு வழங்குமாறு அறநிலையத்துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்து, பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு நீர் மோர், எலுமிச்சை ஜூஸ் வழங்க திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் ஊழியர்கள் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினர். கோடை காலம் முடியும் வரையில் நாள்தோறும் நீர்மோர் வழங்கப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Bhavani Sangameswarar Temple ,Bhawani ,Bhavani Sangameswarar ,Temple ,Hindu ,
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி