- திருமூர்த்தபோண்டி
- திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரி மற்றும்
- விஞ்ஞானம்
- திருவாரூர் மாவட்டம்
- கல்லூரி அதிபர்
- மாறன்
- தாசில்தார் கரல்மார்க்ஸ்
- பாலம்
- சேவைகள்
- செந்தில்குமார்
- தின மலர்
திருத்துறைப்பூண்டி, மார்ச் 16: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது, கல்லூரி முதல்வர் மாறன் தலைமை வகித்தார். தாசில்தார் காரல்மார்க்ஸ், பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சாரு கலந்துக்கொண்டு மாணவ மாணவிகளிடம் பேசுகையில்,18 வயது நிரம்பிய மாணவர்கள் உடனடியாக வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். இதை சமூக கடமையாக கொள்ள வேண்டும். செல்போன் மூலம் இதற்கான ஆப் உள்ளது. அதன் மூலமும் பதிவு செய்யலாம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும். 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டு வருவதே நமது இலக்கு என்றார். வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு துணை வட்டாச்சியர் கார்த்திகேயன், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் பன்னீர்செல்வம், நந்தினி மற்றும் பேராசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
The post மாணவர்கள் வாக்காளராக பதிவு செய்வதை கடமையாக கருத வேண்டும் appeared first on Dinakaran.