×

காரைக்கால் கைலாசநாதர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

 

காரைக்கால்,மார்ச் 16: காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற  சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் சுவாமி தேவஸ்தானம் கோயிலின் பிரம்மோற்சவ விழாவிற்கு பந்தக்கால் முகூர்த்தம் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று ரிஷப வாகனம் பொருத்திய கொடி பூஜைகள் செய்து பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக 23ம் தேதி பெரிய தேரோட்டமும், 26ம் தேதி காரைக்கால் அம்மையார் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

The post காரைக்கால் கைலாசநாதர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Kailasanathar ,Temple ,Panguni Brahmorchava Flagellation Karaikal ,Pandakkal Muhurtham ,Brahmorshavya ,Sundarambhala ,Sameda Kayilasanathar Swami Devasthanam Temple ,Rishapha ,Bhanguni Brahmorchava Flagship ,Dinakaran ,
× RELATED கோட்டுச்சேரி பகுதியில் மழைக்கு பலத்த சேதம்