×

நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு

 

வேலாயுதம்பாளையம், மார்ச்16: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால் ,தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .

அதேபோல் கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன்,திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை, மாரியம்மன் கோயில்,நாணப்பரப்பு மாரியம்மன் கோயில், தளவாபாளையம் மாரியம்மன் கோயில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோயில், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை கோயில் , நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயில், புன்னம் மாரியம்மன் கோயில் ,பேரூர் அம்மன் கோயில், நன்செய் புகளூர் பத்ரகாளி கண்டியம்மன் கோயில்,அத்திப்பாளையம் பொன்னாச்சிஅம்மன், உப்புபாளையம் மாரியம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Panguni ,Chemangi Mariamman temple ,Noyal ,Velayuthampalayam ,Mariyamman temple ,Chemangi ,Noyal, Karur district ,Semangi Mariamman temple ,
× RELATED நொய்யலில் நீர்வரத்து: குளம், ஏரிகள் நிரம்புகிறது