×

வத்தலக்குண்டுவில் சாலையை மேம்படுத்தும் பணி துவங்கியது

வத்தலக்குண்டு, மார்ச் 16: வத்தலக்குண்டுவில் மதுரை சாலை மற்றும் திண்டுக்கல் சாலை மேம்படுத்தப்பட்டு போக்குவரத்து சீராக நடந்து வருகிறது. இந்நிலையில் காளியம்மன் கோயிலில் இருந்து மஞ்சளாற்று பாலம் வரை நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகுந்த அவதியடைந்து வந்தனர். அந்த சாலையையும் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையேற்று முதல் கட்டமாக பொதுமக்கள் நடந்து செல்ல பேவர் பிளாக் பிளாட்பாரத்தை வத்தலக்குண்டு நெடுஞ்சாலை துறையினர் அமைத்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் பஸ் நிலையம் பகுதி சாலையில் இருந்து மேம்படுத்தும் பணியை துவக்கினர். இப்பணியை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர் தாமரைமாறன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post வத்தலக்குண்டுவில் சாலையை மேம்படுத்தும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Vatthalakundu ,Madurai Road ,Dindigul Road ,Kaliamman temple ,Manchalattu bridge ,Vathalakundu ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு பள்ளிகள் முன்பு...