×

முதல்வர் தொடங்கி வைத்த திட்டங்களுக்கு பிரதான குழாய்கள் பதிக்கும் பணி தொடக்கம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொளத்தூர் தொகுதியில் பெரியார் நகரில் கழிவுநீரிறைக்கும் நிலையம் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பு குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள், கொருக்குப்பேட்டையில் உள்ள பாரதி நகர் பகுதியில் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் விடுபட்ட தெருக்களில் குடிநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் மணலி புதுநகர் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு குடிநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன் அடிப்படையில், கொளத்தூர் பகுதியில் உள்ள சிவானந்தா நகர் பகுதிகளில் 2.5 கி.மீ நீளத்திற்கு 250 மி.மீ விட்டமுடைய கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் பெரியார் நகரில் 16.5 கி.மீ நீளத்திற்கு 250 மி.மீ விட்டமுடைய குழாய், 0.31 கி.மீ நீளத்திற்கு 300 மி.மீ விட்டமுடைய குழாய், 0.61 கி.மீ நீளத்திற்கு 400 மி.மீ விட்டமுடைய குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டையில் உள்ள பாரதி நகர் பகுதியில் 2.4 கி.மீ நீளத்திற்கு 150, 200, 300, 450 மி.மீ விட்டமுடைய குடிநீர் பிரதான குழாய்கள் மற்றும் 600 மி.மீ விட்டமுடைய குடிநீர் பரிமாற்ற குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 3 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும்.

மணலி புதுநகர் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு 1.5 கி.மீ நீளத்திற்கு 100 மி.மீ விட்டமுடைய அர்ப்பணிக்கப்பட்ட குடிநீர் குழாயினை 600 மி.மீ விட்டமுடைய குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கண்ணகி நகர் பகுதியில் ரூ.69.57 கோடி மதிப்பீட்டில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு 18.54 கி.மீ நீளத்திற்கு 100 மி.மீ முதல் 400 மி.மீ விட்டமுடைய குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் 0.7 கி.மீ நீளத்திற்கு 400 மி.மீ விட்டமுடைய பிரதான குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 38 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 15,656 ண்ணிக்கையிலான 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர் அடர்த்தி பாலி எத்திலீன் ெதாட்டிகள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 6 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.

 

The post முதல்வர் தொடங்கி வைத்த திட்டங்களுக்கு பிரதான குழாய்கள் பதிக்கும் பணி தொடக்கம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai Water Board ,Chennai ,Chennai Drinking Water Board ,Periyar Nagar ,Kolathur ,Bharathi Nagar ,Korukuppet ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!