×

ராஜ்பவனுக்கு எதற்கு மாணவர்களின் வாக்காளர் அட்டை எண்? ஆளுநரின் எல்லை மீறும் செயல் குறித்து ஜனாதிபதியிடம் புகார்: திமுக எம்பி வில்சன் அறிவிப்பு

சென்னை: ”ராஜ்பவனுக்கு எதற்கு மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண். எல்லை மீறும் ஆளுநரின் செயல் குறித்து ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்கப்படும்\\” என்று திமுக எம்பி வில்சன் கூறியுள்ளார். திமுக எம்பி வில்சன் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை அந்த கல்லூரியை சார்ந்த எல்லா முதல்வருக்கும் அனுப்பி இருக்கிறார்கள். அதில் என்ன சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வாய்மொழி உத்தரவாக கவர்னர் ராஜ்பவன் அலுவலகத்தில் இருந்து ஒரு உத்தரவு வந்துள்ளது.

அந்த உத்தரவின்படி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அத்தனை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் குறித்த தகவலை உடனடியாக சேகரித்து கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது எல்லா முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் வந்தவுடன் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதுபற்றி நானே சில பேராசிரியர்களிடம் கேட்கும் போது, இதுபோன்று தகவல் கொடுப்பது தவறு என்று கூறினார்கள். இதன் பிறகு மேலே இருப்பவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இப்போது, மறுபடியும் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் நாங்கள் கொடுத்த, மாணவர்களிடம் கேட்ட தகவல்களை திரும்ப வாங்கிக்கொள்கிறோம். இது மேல் எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போ என்ன கேள்வி வந்துள்ளது என்றால், எனது எக்ஸ் வலைத்தளத்தில் என்ன கேட்டு இருக்கிறேன் என்றால், ஜனாதிபதிக்கு இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டு போய் இருக்கிறேன். எப்படி வந்து கவர்னர் அலுவலகத்தில் இருந்து இந்த மாதிரி மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை தகவல்களை கேட்க முடியும்.

எதற்காக வந்து இந்த அடையாள அட்டையை கேட்கிறீர்கள். யாரின் தூண்டுதலின் பேரில் அடையாள அட்டையை கேட்கிறீர்கள். கவர்னர் அலுவலகம் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் இது போன்ற விவரங்களை கேட்பதற்கு அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. கவர்னர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்துவது தேர்தல் விதி மீறல் ஆகும். மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை தகவல்களை கேட்கும் அளவுக்கு இவர்கள் தரம் தாழ்ந்து போவது தேர்தல் விதி மீறல். இதை உயர்கல்வி துறை அமைச்சரும் கவனத்தில் எடுத்து கொள்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ராஜ்பவனுக்கு எதற்கு மாணவர்களின் வாக்காளர் அட்டை எண்? ஆளுநரின் எல்லை மீறும் செயல் குறித்து ஜனாதிபதியிடம் புகார்: திமுக எம்பி வில்சன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Raj Bhavan ,President ,DMK ,Wilson ,CHENNAI ,Governor ,Dinakaran ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...