×

தடய அறிவியல் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 29 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 29 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கடந்த மூன்று ஆண்டுகளில் தடய அறிவியல் துறையின் செயல்திறனை உயர்த்தும் வகையில் ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக மேம்படுத்தப்பட்ட டிஎன்ஏ பிரிவுகள், கணினி தடய அறிவியல் பிரிவுகள், நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டது. மேலும், சிறார்களிடம் பாலியல் குற்றங்கள் புரியும் குற்றவாளிகளின் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக போக்சோ சட்டத்தின் கீழான குற்ற நிகழ்வுகளில் தடய அறிவியல் துறை அறிக்கைகளை விரைந்து வழங்கிட, போக்சோ கணினி தடய அறிவியல் பிரிவு சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023-24ம் ஆண்டு நடந்த காவல்துறை மானிய கோரிக்கையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி இந்த துறையை மேம்படுத்த ரூ.25.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில், தடய அறிவியல் துறையை நவீனப்படுத்த தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.26.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 29 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை நேற்று வழங்கினார். நிகழ்ச்சியின்போது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா மற்றும் தடய அறிவியல் துறை இயக்குநர் விஜயலதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post தடய அறிவியல் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 29 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Forensic Science Department ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...