- பஞ்சாயத்து கவுன்சில்
- குமாரப்பேட்டை
- Periyapalayam
- குமாரபெட்
- பஞ்சாயத்து
- எல்லபுரம் யூனியன்
- வெங்கடேசன்
- Kummidipoondi
- சட்டமன்ற உறுப்பினர்
- டிகே கோவிந்தராஜன்
- பஞ்சாயத்து அலுவலகம்
- தின மலர்
பெரியபாளையம்: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே அமைந்துள்ள குமரப்பேட்டை ஊராட்சி அலுவலகம் பழுதடைந்து காணப்பட்டது. இந்த, பழுதடைந்த கட்டிடத்தினை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி தருமாறு, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.கே.கோவிந்தராஜனிடம் கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையின்படி, ஏஜிஎம்டி 2022-23ம் ஆண்டு நிதியிலிருந்து ரூ.31 லட்சத்து 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
இதில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சித்ராமுனுசாமி கலந்துகொண்டு, ரூ.31.46 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியினை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகபூஷணம் வீரபத்திரம், வார்டு உறுப்பினர்கள் மூர்த்தி, குமரேசன், நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஈஸ்வரய்யா, ஈஸ்வரமூர்த்தி, கிளை செயலாளர் சுப்ரமணி, ஹேமசங்கிலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ரூ.31.46 லட்சம் செலவில் குமரப்பேட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.