×

சீரம் நிறுவனம் ரூ.502 கோடி நிதி கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகள் வாங்க அனுமதி தராததன் பின்னணி வெட்டவெளிச்சம்

சென்னை: நாடு முழுவதும் 2021ம் ஆண்டு கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதையடுத்து ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசியை சீரம் நிறுவனத்திடம் இருந்து பெரிய தொகைக்கு கொள்முதல் செய்து இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கியது. ஆனாலும், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. நாடு முழுவதும் தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை மிக அதிக அளவில் இருப்பதுடன், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள், தடுப்பு மருந்துகள் பற்றாக்குறையால் திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வருகின்றன.

இதையடுத்து 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ‘‘மத்திய அரசின் ஒப்புதலை எதிர் பார்த்துக் காத்திராமல், மாநிலங்களே சுதந்திரமாக மருந்துகளையும் தடுப்பூசிகளையும் மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்து கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். ஆனாலும், பிரதமர் மோடி மாநில அரசுக்கு தடுப்பூசி கொள்முதல் வழங்க அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து ஒன்றிய அரசே தடுப்பூசிகளையும், மருத்துவ கருவிகளையும் கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தது. ஒன்றிய அரசுக்கு தடுப்பூசி சப்ளை செய்த சீரம் நிறுவனம்தான் ரூ.502.5 கோடி தேர்தல் நிதியாக பாஜகவுக்கு வழங்கியுள்ளது தற்போது தேர்தல் பத்திரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

The post சீரம் நிறுவனம் ரூ.502 கோடி நிதி கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகள் வாங்க அனுமதி தராததன் பின்னணி வெட்டவெளிச்சம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Union Government ,Vetavalecham ,
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...