×

உயிரியல் பூங்கா சங்கத்தினர் அமைச்சரிடம் மனு

கூடுவாஞ்சேரி:சென்னை அடுத்த வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சங்க பொதுச்செயலாளர் இரணியப்பன் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை சென்னை அடையார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், ‘அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 200க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்.

அவர்களின் சம்பள உயர்வு மற்றும் பூங்காவில் கொடி கம்பம் மற்றும் பெயர் பலகை ஆகியற்றை பூங்கா நிர்வாம் அகற்றியது உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட வனத்துறை அமைச்சர் இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

The post உயிரியல் பூங்கா சங்கத்தினர் அமைச்சரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kuduvanchery ,Anna Zoological Park Workers' Union ,Vandalur ,Chennai ,general secretary ,Iraniyappan ,Forest Minister ,Madiventhan ,Adyar ,
× RELATED மண்ணிவாக்கம் கல்லூரியில் ‘என்...