- உலக உடல் பருமன் விழிப்புணர்வு
- Tirupporur
- உலக உடல் பருமன் தினம்
- அமுர்
- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்
- இந்தியா
- எண்டோ இந்தியா
- உலகளாவிய உடல் பருமன் விழிப்புணர்வு
- தின மலர்
திருப்போரூர்: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம், என்டோ இந்தியா நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், உலக உடல் பருமன் தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்போரூரை அடுத்துள்ள ஆமூர் கிராமத்தில் நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் செல்வகுமாரி வரவேற்றார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜானகி கலந்துகொண்டு, கருவுற்ற தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தேவையான விழிப்புணர்வு கருத்துக்களை கூறினார். உடல் பருமனால் ஏற்படக்கூடிய நோய்கள், அவற்றில் இருந்து பாதுகாத்தல், சத்தான உணவு முறை, தொடர் உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு கருத்துகள் பேசப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டவர்களுக்கு உடல் நிறை குறியீடு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
The post உலக உடல் பருமன் விழிப்புணர்வு appeared first on Dinakaran.