×

நாகர்கோவில் வெறும் குழம்பு

தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் – 1 கப்
மிளகாய் வற்றல் – 3
மிளகாய் – ½ டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – ¼ கிலோ
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – தேவையான அளவு
புளி – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

நாகர்கோவில் வெறும் குழம்பு செய்ய முதலில் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், பூண்டு, மிளகாய் வற்றல், ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் அடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் அடித்தவற்றை புளிகரைசல் கொண்டு கலந்து கொள்ள வேண்டும். அதனை கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி கொதித்ததும் மிதமான தீயில் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து நுரை போல் கொதி வந்ததும் அடுப்பை ஆப் செய்து விட வேண்டும். இப்பொழுது சுவையான வெறும் குழம்பு தயார்.

The post நாகர்கோவில் வெறும் குழம்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...