×

திருச்சி அருகே பொன்னர் – சங்கர் கோயில் திருவிழா கோலாகலம்: சரித்திர நிகழ்வைக் காண திரண்ட ஏராளமான பக்தர்கள்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொன்னர் – சங்கர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பொன்னர் – சங்கர் வீர வரலாற்று சரித்தரம் நடைபெற்ற பகுதிகளில் கோயில்கள் உள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வளநாட்டில் உள்ள பொன்னார் – சங்கர் கோயிலில் கடந்த 9ம் தேதி தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தங்கைக்கு அண்ணன் கிளி பிடித்து கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தங்கை விளையாட மரத்தில் ஏறி அண்ணன் கிளி பிடித்து வந்து கொடுத்தார். வரலாற்றை நினைவுப்படுத்தும் ஐதீக நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திருச்சி அருகே பொன்னர் – சங்கர் கோயில் திருவிழா கோலாகலம்: சரித்திர நிகழ்வைக் காண திரண்ட ஏராளமான பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruchi – Shankar Temple Festival Kolakalam ,Trichy ,Ponnar-Shankar festival ,Manaparai ,Trichy district ,Ponnar-Shankar ,Annanmar Deivas ,Valanath ,Manaparai, Tiruchi district… ,Ponnar ,Tiruchi – Shankar Temple Festival Kolagalam ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...