×

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவா, தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியீடு!

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவா, தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக ஜூன் மாதத்துக்கான தரிசனம், ஆர்ஜித சேவா சங்க தொண்டர்களுக்கான டிக்கெட்டுகள், ஸ்ரீவாரி சேவா ஒதுக்கீடு விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். லக்கி டிப்பில் (குலுக்கல் முறை) ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான பதிவு 18-ம் தேதி காலை 10 மணியில் இருந்து 20-ந்தேதி காலை 10 மணி வரை நடக்கிறது. 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் பணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை இறுதி செய்ய வேண்டும்.

21-ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். ஜூன் 19 முதல் 21 வரை நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தில் பங்கேற்க மார்ச் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். 21-ந்தேதி மதியம் 3 மணிக்கு ஸ்ரீவாரி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவா, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவா டிக்கெட்டுகள், தரிசன டிக்கெட்டுகள் ஆகிய உற்சவள் சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் வெளியிடப்படும். அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 23-ம் தேதி காலை 10 மணிக்கு கிடைக்கும்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம் மற்றும் அறைகள் ஒதுக்கீடு 23-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். 25-ம் தேதி காலை 10 மணிக்கு, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பக்தர்களுக்கு வழங்கப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு 25-ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். திருமலையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களுக்கான சேவை, திருப்பதி ஒதுக்கீடு 27-ம் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் வெளியிடப்படும். மேலே உள்ள அனைத்து ஆன்லைன் ஒதுக்கீட்டையும் திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் பதிவு செய்யலாம். என்று கூறப்பட்டுள்ளது.

 

The post திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவா, தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியீடு! appeared first on Dinakaran.

Tags : Arjita Seva ,Darisana ,Thirumalai ,Tirupathi Devasthanam ,Arjita Seva Sangha ,Tirupathi ,
× RELATED ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6...