×

மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியில்லை?.. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு?

சென்னை: மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை பாஜவுடன் இணைந்து சந்திக்கப்போவதாக அறிவித்த ஓபிஎஸ், அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பாஜ கூட்டணிக்காக சென்ற சரத்குமார், தனது கட்சியையே பாஜவுடன் இணைத்து விட்டார். இதேபோல் ஓபிஎஸ் அணியையும், முழுமையாக பாஜவுடன் இணைப்பதற்காக இதுபோன்ற நெருக்கடிகளை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்த நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜ.க. நிர்பந்தித்ததால் தேர்தலில் இருந்து ஓ.பி.எஸ். அணி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது என்பதால் போட்டியில்லை. சென்னையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்குப் பின் ஓ.பி.எஸ். அணி அறிவிக்க உள்ளது. ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவித்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் வாபஸ் பெற்றார். பா.ஜ.க. கேட்டுக்கொண்டதால் வேட்பாளரை வாபஸ் பெற்றதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

The post மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியில்லை?.. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு? appeared first on Dinakaran.

Tags : OBS ,Lok Sabha elections ,BJP ,Chennai ,Lok Sabha ,O. B. S. ,OPS ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...