×

வட்டார போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

 

ஜெயங்கொண்டம், மார்ச் 15: நேர்முக உதவியாளர்களுக்கு பொறுப்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று போக்குவரத்துதுறை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர், கு.பாலசுப்பிரமணியன் மீன்சுருட்டியில் நேற்று அளித்த பேட்டி:

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய நேர்முக உதவியாளர்களுக்கு பொறுப்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும், மேலும் தொழில்நுட்பம், மென்பொருள் சாப்ட்வேர் டெக்னாலஜி இவற்றை அதில் உள்ள குறைபாடுகளை உடனடியாக போக்கி மக்களுக்கு விரைவு சேவையை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வட்டார போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Transport Department Employees' Union ,Special ,Tamilnadu Transport Department Staff Association ,K. Balasubramanian ,Meensuruti ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் பகுதி சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு