×

பிச்சம்பட்டியில் ரூ.9.77 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம்

 

கரூர், மார்ச் 15: கரூர் மாவட்டத்தில் குளித்தலை சரகத்தில் உள்ள கிருஷ்ணாராயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் பிச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைக்கு சட்டமன்ற தொகுதி நிதி ரூ.9.77 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலை கடை கட்டிடத்தை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேதுமணி, துணைத்தலைவர் வளர்மதி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் சசிகுமார், பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் அருண்மொழி, பொது விநியோகத்திட்ட கள அலுவலர் சத்யா, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சங்க செயலாளர் செல்வராணி, சங்க பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பிச்சம்பட்டியில் ரூ.9.77 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Pichampatti ,Karur ,Krishnarayapuram Primary Agriculture Cooperative Credit Society ,Kulithlai Saramut ,Dinakaran ,
× RELATED கரூர் அருங்காட்சியகத்தில் கல்வி...