×

சாலை விரிவாக்க பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவர் இடிப்பு

கூடுவாஞ்சேரி, மார்ச் 15: ஓட்டேரி சிக்னலில் சாலை விரிவாக்க பணி மற்றும் பேருந்து நிழற்குடை அமைக்கவும் வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவர் இடிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டு செல்வது வழக்கம்.

இங்கு, ஓட்டேரி சிக்னலில் சாலை விரிவாக்க பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவர் இடிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வண்டலூர் கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமப்புறங்கள் உள்ளன. இதில், ஏராளமான தொழிற்சாலைகள் கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில், தாம்பரத்தில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா வழியாக கேளம்பாக்கம், திருப்போரூர், கோவளம் மற்றும் மாமல்லபுரம் ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான மாநகர பேருந்துகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஓட்டேரி சிக்னலில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ள சாலை வளைவில் குறுகிய சாலையாக உள்ளன. இதில், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிழற்குடை இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அன்றாடம் வேலை சென்று வருவோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் பேருந்துக்காக மணி கணக்கில் காத்து நிற்கின்றனர். மேலும், உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களும் சாலையை கடந்து பூங்காவிற்கு சென்று வருவதால் அப்பகுதி எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளன. இதில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தன. இதனால், குறித்த நேரத்துக்கு சென்று வர முடியாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

எனவே, அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும், பேருந்து நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்திடம் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் பேரில் வண்டலூர் உயிரியல் பூங்கா சாலை வளைவில் உள்ள பூங்காவின் சுற்று சுவரை சாலை விரிவாக்க பணிக்காகவும், பேருந்து நிழற்குடை அமைப்பதற்காகவும் கடந்த சில தினங்களாக பூங்கா நிர்வாகத்தினர் இடித்து தரைமட்டமாக்கினர். பின்னர், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நுழைவாயிலின் அருகிலிருந்து வண்டலூர்-கேளம்பாக்கம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள நுழைவாயில் வரை பூங்காவுக்கு சுற்று சுவர் அமைக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

The post சாலை விரிவாக்க பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவர் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Kuduvanchery ,Otteri ,Anna ,Zoo ,Vandalur ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...