×
Saravana Stores

வாறுதட்டு நாகராஜா கோயில் திருவிழா நாளை தொடக்கம்

நித்திரவிளை, மார்ச் 15: நித்திரவிளை அருகே வாறுதட்டு நாகராஜ கோயில் திருவிழா நாளை(16ம் தேதி) தொடங்குகிறது. ெதாடர்ந்து வருகிற 22ம் தேதி வரை விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை கணபதி ஹோமம், சுதர்சனஹோமம், தீபாராதனை, மதியம் பூஜை, அன்னதானம், மாலை பஜனை, இரவு திருவிளக்கு பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது. சிறப்பு நிகழ்வுகளாக முதல் நாள் காலை நாகரூட்டு, மாலை 508 திருவிளக்கு பூஜை, இரவு சமய மாநாடு, 3ம் நாள் மற்றும் 4ம் நாள் இரவு சமய மாநாடு, 5ம் நாள் இரவு கலை நிகழ்ச்சிகள் 6ம் நாள் இரவு கலை நிகழ்ச்சிகள், நடுஜாம பூஜை, கடைசி நாள் காலை நாகரூட்டு, வருடாந்திர கொடை, பொங்காலை ஆகியன நடக்கிறது.

The post வாறுதட்டு நாகராஜா கோயில் திருவிழா நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Rupathatu Nagaraja temple festival ,Nithravilai ,Rupathatu Nagaraja Temple ,Ganapati Homam ,Sudarsana Homam ,Deeparathana ,afternoon Puja ,Annadanam ,
× RELATED நித்திரவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது