- புதுச்சேரி
- சந்திரா பிரியங்கா
- போக்குவரத்து அமைச்சர்
- காரைக்கால்
- வடக்கு
- சட்டமன்ற உறுப்பினர்
- திருமுருகன்
- புதுச்சேரி ஆளுநர் மாளிகை
புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியாங்கா டிஸ்மிஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, 5 மாதத்துக்கு பின் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகன் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
The post புதிய அமைச்சர் பதவியேற்பு appeared first on Dinakaran.