×

ஈடி, சிபிஐ மூலம் மிரட்டி ரூ.400 கோடி நிதி திரட்டிய பாஜ: கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் நேற்று பதிவிடுகையில், ஒன்றிய அரசு அமைப்புகளான அமலாக்கத்துறை,சிபிஐ ஆகியவை ரெய்டு நடத்தியதற்கு பின்னர் 15 நிறுவனங்கள் பாஜவுக்கு தேர்தல் நிதி அளித்துள்ளன . ஒன்றிய அமைப்புகளின் சோதனைக்கு பின்னர் 15 நிறுவனங்கள் அந்த கட்சிக்கு நிதி அளித்துள்ளன.

அதன் மூலம் மொத்தம் 45 நிறுவனங்களில் இருந்து பாஜவுக்கு ரூ.400 கோடி கிடைத்துள்ளது. 4 போலி நிறுவனங்களும் பாஜவுக்கு நிதி அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சர்வாதிகார மோடி அரசு காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி உள்ளது. ஆனால்,ஒன்றிய ஏஜென்சிகளை பயன்படுத்தி கட்சிக்கு பணம் திரட்டியுள்ளனர்.

தேர்தல் அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டு கட்சி நிதியை 10 மடங்கு அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் தாய் என்ற இந்தியாவின் பெருமையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை இருந்தால் கட்சி நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட பாஜ தயாராக இருக்கிறதா என கேள்வி கேட்டுள்ளார்.

The post ஈடி, சிபிஐ மூலம் மிரட்டி ரூ.400 கோடி நிதி திரட்டிய பாஜ: கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,ED ,CBI ,Kharke ,New Delhi ,Congress ,president ,Mallikarjuna Kharge ,Twitter ,Union government ,Enforcement Directorate ,
× RELATED திமுகவினரின் செல்போன் ஒட்டுக்கேட்பு: திமுக புகார்