×

தென்னை பயிரிடும் விவசாயிகளின் நலனை காத்திட கொப்பரை தேங்காய், உளுந்து, பச்சை பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 4.577 லட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தேங்காய்களை மதிப்புக்கூட்டி கொப்பரைகளாக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலமாக, கொப்பரை தேங்காய் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிக குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர் உட்பட 26 மாவட்டங்களில் உள்ள 75 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலம் கடந்த ஆண்டில் 48,364 விவசாயிகளிடம் இருந்து 79,021.80 மெ.டன் அரவை கொப்பரை ரூ.858.176 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு 2024ல் பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.120ம் மற்றும் அரவை கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.111.60ம் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட உள்ளது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் ஒன்றிய அரசினை வலியுறுத்தியதன் அடிப்படையில் 90,300 மெ.டன் என்ற அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு கொப்பரை கொள்முதலுக்கான அனுமதி ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது. இத்திட்டம் 2024 நடப்பாண்டில் இன்று முதல் 10.6.2024 வரை நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் இன்று முதல் 10.6.2024 வரை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, உடப்ட 17 மாவட்டங்களிலும், 1.4.2024 முதல் 29.6.2024 வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும் உள்ள 53 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலம் 1,42,780 மெட்ரிக்டன் உளுந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

உளுந்து கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.69.50 வழங்கப்படும். பச்சைபயறு இன்று முதல் 10.6.2024 வரை திருவள்ளூர் மாவட்டத்திலும், 1.4.2024 முதல் 29.6.2024 வரை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள 11 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலம் 1,860 மெட்ரிக் டன் பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.85.58 வழங்கப்படும். எனவே, விவசாயிகள் பெயர்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

The post தென்னை பயிரிடும் விவசாயிகளின் நலனை காத்திட கொப்பரை தேங்காய், உளுந்து, பச்சை பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,CHENNAI ,Minister of Agriculture and Farmers' Welfare ,MRK Panneerselvam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...