×

வார இறுதி நாட்களை முன்னிட்டு 360 சிறப்பு பேருந்துகள் இன்று கூடுதலாக இயக்கம்

சென்னை: மார்ச் 16ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 17ம் தேதி (ஞாயிறு) விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் இதனால், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 360 பேருந்துகளும், நாளை 420 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 70 பேருந்துகளும், நாளை 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று கூடுதலாக 360 சிறப்பு பேருந்துகளும் சனிக்கிழமை 420 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

The post வார இறுதி நாட்களை முன்னிட்டு 360 சிறப்பு பேருந்துகள் இன்று கூடுதலாக இயக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Klambach ,Tiruvannamalai ,Trichy ,Kumbakonam ,Madurai ,Tirunelveli ,
× RELATED திருமணமான 20 நாளில் புதுப்பெண் கடத்தல்: சென்னை கணவர் புகார்