- ஜனாதிபதி
- முதல் அமைச்சர்
- டெஹ்ராடூன்
- திரபூபதி மர்மு
- உத்தரகண்ட் சட்டமன்றம்
- உத்தரகண்ட்
- இந்தியா
- ஏ தமி
- தின மலர்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் உத்தரகாண்ட் ஆகும். உத்தரகாண்ட் சட்டபேரவையில் கடந்த மாதம் 6ம் தேதி பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
நேற்று முன்தினம் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அறிவிக்கையை மாநில அரசுக்கு ஜனாதிபதி மாளிகை அனுப்பியுள்ளது. இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில்,‘‘ இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம். மேலும் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கவுரவம் ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளதால் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை கிடைப்பதோடு,பெண்களின் மீதான அடக்குமுறைக்கு முடிவு கட்டப்படும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி மாநிலத்தில் பொது அமைதியை உருவாக்குவதில் பொது சிவில் சட்டம் முக்கிய பங்கு வகிக்கும். ‘அனைவரின் ஆதரவு, அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற பிரதமர் மோடியின் கோஷத்தை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.
The post உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும்: முதல்வர் அ தாமி பேட்டி appeared first on Dinakaran.