×

பெண்கள் ஐபிஎல் எலிமினேட்டர் மும்பை – பெங்களூர் பலப்பரீட்சை

டெல்லி: பெண்கள் ஐபிஎல் போட்டி லீக் ஆட்டங்கள் பிப்.24ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை பெங்களூரில் நடந்தது. தொடர்ந்து மார்ச் 6ம் தேதி முதல் டெல்லியில் நடந்த லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தப்பாட்டியில் முதலிடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் நேரடியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைய, 2, 3 வது இடங்கள் பிடித்த மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று எலிமினேட்டர் சுற்றில் மோதுகின்றன.

இதில் வெற்றிப் பெறும் அணி மார்ச் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்ளும். எலிமினேட்டர் சுற்றில் மோதும் மும்பை, பெங்களூர் அணிகள் நடப்புத் தொடரில் 2 முறை மோதியுள்ளன. முதல் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமயிலான மும்பையும், 2வது ஆட்டத்தில் ஸ்மிரிதி மந்தானா தலைமையிலான பெங்களூரும் தலா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளன.

இந்தத் தொடரில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும் இதுவரை பெண்கள் ஐபிஎல் தொடர்களில் இரு அணிகளும் மோதிய 4 ஆட்டங்களில் மும்பை 3-1 என்ற கணக்கில் வென்று முன்னிலையில் உள்ளது. அதனால் இன்றைய எலிமினேட்டர் ஆட்டம் விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்ததாக இருக்கும்.

The post பெண்கள் ஐபிஎல் எலிமினேட்டர் மும்பை – பெங்களூர் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Women's IPL Eliminator Mumbai ,Bangalore ,Delhi ,Women's IPL ,Dinakaran ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...